
அவனியாபுரத்தில் புரோட்டா சாப்பிட்ட வாலிபருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பலியானார். அவனியாபுரம் மீனாட்சி நகர் எம்ஜிஆர் இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் தங்கப்பாண்டி 24. இவர் சம்பவத்தன்று இரவு ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு தொடந்து வாந்தி ஏற்பட்டது. அத்தோடு மயக்கமும் ஏற்பட்டது.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிவாலிபர் தங்கபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அப்பா சந்திரசேகர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தை வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1