வாகனம்வீடியோ

அழியாத புகழ் கொண்ட யமாஹா ஆர்எக்ஸ் 100

Yamaha RX 100 | History | Bike

டிரைவ் தமிழ் நேயர்களுக்கு வணக்கம். என்னதான் மோட்டார் துறையில் புதிது புதிதாக களமிறங்கினாலும், பழசுக்கு இருக்கின்ற பவரும், அதன் மேல் இருக்கும் காதலும் ஒருபோதும் குறைவதில்லை. அதைதான் ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அந்த வரிசையில் பைக் மாடலில் யமஹா ஆர்எஸ்100 பைக்கிற்கு ரசிகர்கள் இன்றளவும் உள்ளனர். இதற்கு காரணம் அதன் சத்தம் மட்டுமல்ல அதன் தனித்துவமான ஸ்டைலும், பவர்ஃபுல் இஞ்சினும்தான்.   தமிழ் திரைப்படங்களில்  இந்த பைக் இன்றைக்கும் தனது மாசை காதாநயாகர்களுடன் காட்டிக் கொள்ள தவறுவதில்லை.  இன்றைக்கும் யமஹா ஆர்எஸ்100க்கு மேல் இருக்கும் குறையாத காதலுக்கு என்ன காரணம் ?  வாங்க தெரிந்து கொள்வோம்.

மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டை பிடிக்க சுஸூகியும் ஹோண்டாவும் முட்டி மோதிக்கொண்டிருந்த காலத்தில், இடையில் புகுந்து அதகளப்படுத்தி யமஹாவை தூக்கி நிறுத்திய பைக்தான் ஆர்எக்ஸ்100. இன்றைக்கும், சாலைகளில் ஆர்எக்ஸ்100 சப்தம் கேட்டால் போதும், ஒரு கூட்டமே திரும்பி பார்க்கும். கருப்பு, சிகப்பு நிறத்தில் இருக்கும் ஆர்எக்ஸ்100 பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு நாள் முழுதும் அதன் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

1983 ஆம் ஆண்டு எஸ்கார்ட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஜப்பான் நாட்டின் யமஹா மோட்டார் நிறுவனம் வந்தடைந்த பிறகு ராஜ்டூட் 350 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.  அதன்பிறகு இந்தியா சுஸூகி-டிவிஎஸ் கூட்டணியில் வெளிவந்த 100சிசி ஏஎக்ஸ்100 மாடல் வெற்றி பெற்றது. அதன் பிறகு 1985ஆம் ஆண்டு, யமஹா நிறுவனம், தனது ஜப்பான் ஆலையில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு நாயகனை உருவாக்கி களமிறக்கியது. அதுதான் ஆர்எக்ஸ்100.

இந்த வீரன், 100 சிசி, 2 ஸ்டோக் ஏர் கூல் எஞ்சின், அதிகபட்சபவர் 11 BHP at 7500 RPM, அதிபட்ச டார்க் 10.39 NM at 6500 RPM, அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ,  இதன் எடை 95 கிலோ, பைக் மொத்தமும் மெட்டல் எனது ஒவ் வொன்றும் மிரட்டலானது. முக்கியமாக 400 மீட்டர் தூரத்தை வெறும் 14 நிமிடங்களில்  கடந்துவிடும். இந்த வேகம் இன்றைக்கு வரும் விலை உயர்ந்த ரேஸ் பைக்கில் கூட இல்லை என்பதுதான் ஆர்எக்ஸ்100 தனிச்சிறப்பு.

பெரும் பணக்காரர்கள் மட்டுமே ஓட்டி வந்த புல்லட் பைக்கிற்கு மத்தியில், சாமானியனும்  ஓட்டி, சைனலன்ஸ் சப்தம் தெறிக்கவிட்டு, புல்லட்டை நிறுத்தி பார்க்கவைத்த சரித்திர நாயகன் ஆர்எக்ஸ்10 0என்றால் அது மிகையாகாது. ஆமாம் அன்றைக்கு இந்த பைக்கின் விலை ரூபாய் 19,764 மட்டுமே.

1985 ஆம் ஆண்டு முதல் எந்தவிதமான தோற்ற மாற்றங்களும் இல்லாமல் சந்தையை கலக்கி வந்த ஆர்எக்ஸ் 100 பைக் உற்பத்தி, 1996 ல் நிறுத்தப்பட்டது.  11 ஆண்டுகள் மட்டுமே இதன் பயணம் என்றபோதும், இந்திய சாலையில் தடம் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு  வலம் வந்துள்ளது.

ஆர்எக்ஸ் 100 பைக் நிறுத்தத்திற்கு, திருடர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தனர் என்பது உள்பட பல கட்டுக்கதைகள் அன்றைக்கு வெளிவந்தாலும்,  உண்மையான காரணம் என்னவென்றால் ? சுற்றுசூழல் பிரச்சனையின் காரணமாக 2 ஸ்ட்ரோக் எஞ்சின்களை கைவிட வேண்டிய கட்டாயத்தினால் சந்தையிலிருந்து ஆர்எக்ஸ்100 பைக்கின் உற்பத்தியை நிறுத்தி விட்டோம் என்று திட்டவட்டமாக யமஹா நிறுவனம் கூறியதே.

அதன்பிறகு ஆர்எக்ஸ் 100 இல்லாத குறையை நீக்க ஆர்எக்ஸ் ஜி, ஆர்எக்ஸ்135, ஆர்எக்ஸ் இசட் ஆகிய மாடல்களை யமஹா நிறுவனம் களமிறக்கினாலும், ஆர்எக்ஸ் 100  இடத்தை இதுவரை அந்நிறுவனத்தின் எந்த ஒரு மாடலும் நெருங்க கூட முடியவில்லை.  இன்றைக்கும் இலட்ச கணக்கில் பணம் கொடுத்து  வாங்கும் ரகிசர்கள் இருக்கும் பட்சத்தில், மீண்டும் ஆர்எக்ஸ் 100 மாடலை யமாஹா களமிறக்குமா என்ற பலரின் எதிர்பார்ப்புக்கு அந்நிறுவனம் கூறிய பதில், 2 ஸ்டிரோக் இன்ஜின்களுக்கு தடை போட்டு பல வருடம் ஆகிறது.

அந்த இன்ஜின்களுக்கு இருக்கும் தனித்தன்மை 4 ஸ்டிரோக் இன்ஜின்களுக்கு கிடையாது. ஆனால், 4 ஸ்டிரோக் இன்ஜின் குறைவான காற்று மாசு ஏற்படுத்தும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும், சூப்பரான சத்தத்தோடும் யமஹாவிடம் இருந்து ஒரு பைக் உறுதியாக வெளிவரும். ஆனால் அது ஒருபோதும்  ஆர்எக்ஸ்100 ஆகாது  என்பதே. ஆக, யமஹாவிடமிருந்து புது பைக் வந்தாலும் அது ஆர்எக்ஸ்100 எனும் பெயரோடு வராது. அப்படி வந்தாலும் அந்த பைக் பழைய பைக்கின் இடத்தைப் பிடிக்காது. ஏனென்றால் ஆர்எக்ஸ்100 இளைஞர்களின் கிளாசிக் ஐகான்.

கூடுதலாக இந்த பைக் ஓட்டுபவர்களுக்கு மட்டுமின்றி, பின்னால் இருப்பவர்களுக்கும் சவுகரியமாக இருக்கும். எவ்வளவு தூரம் ஓட்டிச் சென்றாலும், தோள்பட்டை வலி மற்றும் களைப்பு தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டது. புல்லட் சத்தம் பலருக்கும் எரிச்சல் ஊட்டும், ஆனால் ஆர்எக்ஸ் 100 சைலன்சர் சத்தம் ரசிக்கத் தூண்டும். அதுமட்டுமில்லாது, இந்த பைக் மெக்கானிக்களுக்கு பெரிய அளவில் கிராக்கி இன்றளவும் உள்ளது. இன்றைக்கும் இந்திய சாலை எங்கிலும் ஆர்எக்ஸ் 100 தனது அழகிய பயணத்தை அசராமல் புதிய பைக்குகளுக்கு மத்தியில் தன்னை தனித்து காட்டிக் கொண்டிருக்கின்றது.

ரோட்டில் சைடு ஸ்டாண்டு போட்டு நிறுத்தினால்  போதும், வழியில் செல்லும் ஊர் கண் மொத்ததும் இதன்மீது படும். கடல் போட்டிற்கு இந்த இஞ்சின்தான் பொருத்தப்படுகிறது. அதற்காக இந்த இஞ்சின் திருடப்படுகிறது என்று பலரும் கூறியதைக் கேட்டு, வாய்பிளந்து,  அழகில் மயங்கி,  இதை வாங்கியே தீர வேண்டும் என்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு வாங்கி சாலையில் பறந்த இதயங்களில் மட்டும் அல்லாது, இதுவரை ஓட்டிப் பார்க்காதவர்களின் கனவிலும் கதாநாயகான ஓடிக் கொண்டிருக்கும் யமஹா ஆர்எக்ஸ் 100 என்றைக்கும்  ராஜாதான்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: