ஆன்மீகம்செய்திகள்

அழகர்கோவில் களைகட்டிய ஆடித்தேரோட்டம் | 14ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு

Alagarkoil Weeded Aditherotam | The festival ends on the 14th with a peaceful festival

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடி பெருந்திருவிழா நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் அரசின் தளர்வுகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

அதன்படி கடந்த 4ந் தேதிகாலையில் கொடி ஏற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது. பின்னர், உற்சவர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாள், பூமாலைகள் அலங்காரத்தில் எழுந்தருளி அங்குள்ள மண்டபத்தில் அருள் பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, 5ந் தேதி மாலையில், சிம்ம வாகனத்திலும் ,6ந் தேதி அனுமார் வாகனத்திலும் ,7 ந் தேதி கெருட வாகனத்திலும், 8-ந் தேதி கள்ள ழகர் பெருமாள், கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்பினார். பின்னர் ,அன்று மாலையில் சேஷ வாகனத்தில் பெருமாள்காட்சி தந்தார்.

9- ந் தேதி மாலையில் யானை வாகனத்திலும், 10ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரத்திலும் பெருமாள் காட்சி தந்தார். 11ந் தேதி இன்று மாலையில் தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் காட்சி தந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை 12ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து, காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெற்றது. முன்னதாக, திருத்தேரின் அடுக்கு முகப்புகளை நேற்று வர்ண துணிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு தயார்’ நிலையில் இருந்தது.

தேரின் நான்கு இரும்பு சக்கரங்களுக்கு கிரிஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேரின் வடங்கள் சரிபார்க்கப்பட்டு தயாராக உள்ளது. 13ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14ந் தேதி ஞாயிற்றுகிழமை உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை, தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: