ஆன்மீகம்செய்திகள்

அழகர்கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

The festival started with the hoisting of the festival flag at Alaghar Temple

அழகர் கோவிலில் ஆடிப்பெரும் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் இன்று இரவு அன்ன வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். தொடர்ந்து, நாளை வெள்ளிக்கிழமை சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார்.

தொடர்ந்து, சனிக்கிழமை அனுமார் வாகனத்திலும் ஞாயிற்றுக்கிழமை கருட வாகனத்திலும் திங்கள் கிழமை சேஷா வாகனத்திலும் செவ்வாய்க்கிழமை யானை வாகனத்திலும் புதன்கிழமை புஷ்ப சப்பரத்திலும் வியாழக்கிழமை தங்க பல்லக்கில் தங்கப்பிள்ளைகள் எழுந்தருளி குதிரை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் அன்று இரவு புஷ்ப பல்லாக்கில் சுந்தர்ராஜ் பெருமாள் புறப்பட காட்சி கொடுக்கிறார்.

தொடர்ந்து, சனிக்கிழமை தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாதியுடன் ஆடிப்பெரும் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலரும் துணை ஆணையாளர் மு.ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: