செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்; வாடிவாசல் பகுதியை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Madurai News

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (07.01.2021) பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்:

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியினை நேரடியாக வந்து பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த வருடம் இளைய சமுதாயத்தினர் மற்றும் இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைக்க வருகை தரவுள்ளனர்.

தைப் பொங்கல் திருநாளான 14-ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், 15-ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், 16-ஆம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறுவதற்கான அரசாணை நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. மாடு பிடி வீரர்கள் பதிவு செய்யும் நாள் 09.01.2021. காளைகள் பதிவு செய்யும் நாள் 11.01.2021.

காளைகளின் உரிமையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ தகுதி மற்றும் RT-PCR பரிசோதனை அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கு, அவனியாபுரம் ஒன்றிய துவக்கப்பள்ளியில் 10.01.2021 மற்றும் 11.01.2021 அன்றும், பாலமேடு ஜல்லிக்கட்டிற்கு, பாலமேடு ஒன்றிய துவக்கப்பள்ளியில் 11.01.2021 மற்றும் 12.01.2021 அன்றும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு, அலங்காநல்லூர் ஒன்றிய துவக்கப்பள்ளியில்12.01.2021 அன்றும் நடைபெறவுள்ளது.

தமிழக அரசு அறிக்கையின் படி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் அனுமதி. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதி. திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகிதத்திற்கு மிகாமல்; பார்வையாளர்களுக்கு அனுமதி.

பார்வையாளர்கள் THERMAL SCANNING செய்த பிறகே அனுமதி. மாடுபிடி வீரர்கள் கொரோனா தொற்று இல்லையென சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள தயார்நிலையில் உள்ளனர். மேலும் காளைகளின் உரிமையாளர்கள், உதவியாளர்கள், மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக போதுமான RT-PCR கிட்டுகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு உள்ளன. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.

இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஏலக்காய், உர்ந்த திராட்சை, ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

குடிமராத்து திட்டதின் கீழ் தூர்வாரப்பட்ட வாடிப்பட்டி வட்டம் சந்தையாறு அணை தற்போது மழைநீரால் நிரம்பியுள்ளதை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், காவல்துறை கண்காணிப்பாளர் சுர்ஜித் குமார், வருவாய் கோட்டாட்சியர் (மதுரை) முருகானந்தம், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் சேதுராமன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் செல்லத்துரை, வாடிப்பட்டி வட்டாட்சியர் பழனிக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: