அலங்காநல்லூர், சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி சிதம்பரனார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
VUC birthday celebration in Madurai

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி கிராமத்தில், அமைந்துள்ள வ.உ.சி சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அலங்காநல்லூர் வட்டார, வ.உ.சி பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, இனிப்பு வழங்கினர். இதில், நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், சதீஷ், செந்தில் பாலா, முடுவார் பட்டி செல்வம், பாலமேடு முருகன் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதேபோல் சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனார் 151 வது பிறந்த நாளையொட்டி, ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அமைந்துள்ள அவரது முழு உருவ திருவுருட்சிலைக்கு வ.உ.சி. அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் பாஸ்கரன் (எ) ராஜசேகரன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் தமிழரசன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன்.
மற்றும் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் விக்னேஷ் மற்றும் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது.