
மதுரைமாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சரந்தாங்கி கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா நடந்தது. தொடர்ந்து, அவரது முழு உருவச்சிலைக்கு, வணிகவரி துறை அமைச்சர் பி.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்எல்ஏ, திமுக அவைத் தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், பொதுகுழு உறுப்பினர் தனராஜ், ஒன்றியச் செயலாளர் கென்னடி கண்ணன், முன்னாள் தலைவர் ரகுபதி, இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு ,அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், பாரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி முத்தையன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1