செய்திகள்விருது | விழா | கூட்டம்

அலங்காநல்லூரில் வழிகாட்டி நட்சத்திரங்கள் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Awareness marathon competition organized by Guide Stars Foundation at Alankanallur

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வழிகாட்டி நட்சத்திரங்கள் அறக்கட்டளை சார்பில் நெகிழியை தவிர்ப்போம், மண்வளம் மீட்போம், துணி பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன், காவல் பார்வை ஆசிரியர் டாக்டர் ஏ.கே. ரெட்டி ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டி கி.மீ 6 அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் தொடங்கி, முடுவார்பட்டி வரை நடந்து முடிந்தது. இப்போட்டியில் சுமார் 150 இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியிர் முதல் நான்கு பரிசுகள் பெற்ற இளைஞர்களுக்கு பரிசு பொருள்களும், கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், மஞ்சப்பை வழங்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் STM செந்தில்குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினர். வழிகாட்டி நட்சத்திரங்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர்கள் ரஞ்சித் குமார், தேவராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: