
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் சார்பாக மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் அரங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
அக்கூட்டத்தில் தென்னிந்திய மக்கள் தான் அரிசியை பயன்படுத்துகின்றனர். அதில் குறிப்பாக தமிழக மக்கள் தான் அரிசியை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒன்றிய அரசு அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு 5% சத ஜிஎஸ்டி வரிவிதித்ததன் மூலம் 25 கிலோ வரை வாங்கும் நடுத்தர , சாமானிய மக்கள் பயன்படுத்தும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருள்கள்விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது .
சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் இந்த விலை ஏற்றம் பாதிக்காத வகையில் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும்.
அரிசி, ஆலைகளுக்கு112 கிலோ வாட் இருந்து 150 கிலோ வாட் மின்சாரத்தை வழங்கிய தமிழகஅரசிற்கு நன்றியும். 150 கிலோ வாட் மின்சாரம் கொடுப்பதால் நிரந்தர கட்டணம் மற்றும் மின் கட்டணம் உயர்த்தாமல் பழைய மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
மின்கட்டண உயர்வால் அரிசி விலை உயர வாய்புகள் உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்கப்படும் நெல்லுக்கு மட்டுமே சந்தை கட்டணம் (செஸ் வரி )வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் துளசிங்கம் தமிழக முழுவதும் கூடுதலாக 12 லட்சம் டன் நெல்லை சேமிப்பதற்கு கூரையுடன் கூடிய கிடங்கு அமைப்பதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றியும், ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதற்கு நெல் அரவைக்கு ரூ 20 ல் இருந்து ரூ 40 உயர்த்தி கொடுத்திருக்கும் தமிழக அரசுக்கு சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படை கின்றனர். ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி குறித்த எங்களின் எதிர்ப்புகளை பரிசீப்பதாக தெரிவித்துள்ளது. வரும் 16ஆம் தேதி மதுரையில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது குறிப்பிட்டார்.
சங்க கூட்டம் நடைபெறும் முன்னதாக இதே வளாகத்தில் அரிசி ஆலைகளுக்கு தேவையான நவீன இயந்திரங்கள். உபகரணங்கள் கண்காட்சி நடைபெற்றது.