செய்திகள்புகார்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல இடங்களில் கட்டிட சுவர்கள் பெயர்ந்து விழுந்தது | பயத்தில் நோயாளிகள்

The walls of the Government Rajaji Hospital have shifted and fallen at many places Patients with fear

தென் மாவட்டங்களை பிரதானமாக கொண்டு செயல்பட்டு வரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் கட்டி சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவைகளை புனரமைப்பு செய்யவும், புதிய கட்டிடங்களை கட்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் மதுரையின் நகர் பகுதிகளில் நேற்று பெய்த மழையால் ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல வார்டுகளில் உள்ள மேற்கூரை சுவர்கள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளன.

3 வது தளத்தில் உள்ள 90 வார்டு புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த லேப்ரோஸ்கோப்பி கருவி உள்ளிட்ட மருத்துவ கருவிகள் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கருவிகள் சேதமடைந்து உள்ளன.

மேலும், அந்த வார்டின் வெளிப்புற ஜன்னலின் மேலிருந்த மேற்கூரை சுவர்கள் பெயர்ந்து விழுந்ததில் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாகியது. இதே போல, குழந்தைகள் வார்டிலும் மேற்கூரை சுவர்கள் பெயர்ந்து விழுந்துள்ளன.

நல்வாய்ப்பாக இந்த விபத்துக்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், இட நெருக்கடி காரணமாக வார்டுகளை மாற்றி அமைப்பது, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு உண்டான வாய்ப்புகள் இல்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தென் தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கட்டிடங்களை முறையாக பராமரித்து, உயிர் காக்க வந்த நோயாளிகள் உயிர் காக்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: