
மதுரை பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலையில் வழியாக திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஆய்வு பணியில் இருந்த மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் போடி லயன் மேம்பாலத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
அதில் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வருவதை பார்த்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் பேருந்து ஓரமாக நிறுத்தச் சொல்லி கல்லூரி மாணவர்கள் அனைவரையும் எச்சரித்து மேலே ஏறச் சொன்னார். மீண்டும் இது போன்று பேருந்து படிக்கட்டுகள் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார். இவரின் செயல்பாட்டிற்கு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் சாலையில் சென்ற பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1