
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி குரங்கு தோப்பில் அரசு உதவி பெறும் ஆர்.சி பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கிராம பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பீரோ, ஸ்மார்ட் டிவி, சேர், மின்விசிறி மற்றும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் சுற்றுச்சுவர் கட்ட நன்கொடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் காந்திவரவேற்புரை ஆற்றினார்* இதில் குருநாதன் விஜயபாஸ்கர் சித்தர்பீடம் சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளி தலைமை ஆசிரியர்.ராபின்சன் செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டாலின் செய்திருந்தார்.
பின்னர் தலைமை ஆசிரியர் ஸ்டாலின் கூறும் போது, ஆங்கிலப் பள்ளிக்கு இணையாக தமிழ் பள்ளி வளர வேண்டும் என்ற நோக்கத்தில், ஸ்மார்ட் டிவி, மேஜை, பீரோ, மின்சார மணி ஆகிய பொருட்களை நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் மஹாலில் இருந்து ஊர்வலமாக பள்ளிக்கு சீர்வரிசையாக பொதுமக்கள் கொண்டு வந்து வழங்கினார்கள்.
இதில் ஆசிரியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.