செய்திகள்மதுரை

அரசு இலவச தொழிற்பயிற்சியில் மாணவர்கள் இணைய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை கோ.புதூரில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சியாளர்களை இணையதளம் வாயிலாக தேர்வு செய்யும் பொருட்டு முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் Spot Admission நடைபெற்று முடிந்த நிலையில் இந்நிலையத்தில் உள்ள வெல்டர், டர்னர், வீட்மெட்டல் ஒர்க்கர், மெஷினிஸ்டு, புட் புரடெக்சன், இன்டீரியர் டிசைன் அன்ட் டெக்கரேசன், டிடிபிஓ, கம்ப்யூட்டர் உறார்டுவேர் போன்ற தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு 05.12.2020 முதல் நேரடி சேர்க்கை (SPOT ADMISSION) நடைபெற்று வருகிறது.

தற்போது அதற்கான கால அவகாசம் 12.12.2020 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயண அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு கீழ்க்காணும் சலுகைகள் அரசால் வழங்கப்படும்.

1) உதவித்தொகை மாதம் ரூ.500
2) இலவச பேருந்து அட்டை
3) மடிக்கணிணி
4) மிதிவண்டி
5) பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள்
6) 2 செட் சீருடைகள் மற்றும் தையற்கூலி
7) ஒரு செட் காலணிகள் (Shoe)
8) அடையாள அட்டை

மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், பயிற்சியின்போதே பிரபல தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துத் தரப்படும். எனவே, பயிற்சியில் சேருவீர். பயன் பெறுவீர்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : திருமதி.ஜோ. அமலாரெக்சலீன், துணை இயக்குநர் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோ.புதூர், மதுரை – 625 007. தொலைபேசி எண்: 0452 – 2903020, 8220008486, 9976010003

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: