செய்திகள்

மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் அமைச்சர் தங்கம் தென்னரசு பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு

Hello Madurai News

மதுரை மாவட்டம் மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி,தமிழ் பண்பாட்டுத்துறை,தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம் மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள் துறை தங்கம் தென்னரசு பராமரிப்பு பணிகள் குறித்து இன்று(12.06.2021) ஆய்வு செய்து தெரிவிக்கையில்:

மதுரை மாநகரத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக,தென் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய வரலாற்று சின்னங்களில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாக திகழக் கூடியதும், மன்னர் திருமலைநாயக்கர் அவர்களால் எழுப்பப்பட்டு பல்வேறு கால சூழ்நிலைகளையும் தாங்கி இன்று மதுரை மாநகரத்திற்கு பெருமை சேர்க்க கூடியதுமான திருமலைநாயக்கர் மகால் என்ற அவருடைய அரண்மனை வளாகத்தை இன்றைக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் புதுப்பித்து பொழிவுறக் கூடிய முயற்சியிலே அரசு ஈடுபட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் இருக்கக் கூடிய மரபுச் சின்னங்கள்,ப ண்பாட்டுச் சின்னங்கள் ஆகியவற்றை அதனுடைய பழமைகெடாமல் புதுப்பித்து தமிழர் நாகரிகமும் பண்பாடும் ஓங்கி உலகளாவாய செய்ய வேண்டும் என சொல்லியுள்ளார்கள். அந்த பெருவிருப்பத்தின் அடிப்படையில் அவற்றையெல்லாம் சரியான முறையில் பராமரிப்பதோடு அவற்றை பயன்படுத்தி அவற்றின் வாயிலாக தமிழ் சமுதாயத்திற்கும் எதிர்கால சந்ததியினற்கும் நம்முடைய பண்பாட்டை தமிழ் கலாச்சாரத்தை நம்முடைய முழுமையங்களை அவர்கள் உணர்ந்து தெளிவு பெறக் கூடிய வகையிலும், அருங்காட்சியங்கள் அமைக்கக் கூடிய முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

இத்தகைய மரபுச் சின்னங்களை பாதுகாத்து சிறப்பிக்கக்கூடிய வகையிலே செயலாற்றிட வேண்டும் என்று முதலமைச்சர் கொடுத்துள்ள அறிவுரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை இந்த திருமலைநாயக்கர் மகால் வளாகத்தில் சுமார் ரூ.8 கோடி செலவில் புதுப்பிக்கக் கூடிய பணிகளையும், இங்குஒலி, ஒளிஅமைப்பை உருவாக்கக் கூடிய பணிகளையும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருக்கிறது.

இந்த அரண்மனை வளாகம் 2007ம் ஆண்டு தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுநான் தொல்பொருள் அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் ஏறத்தாழ ரூ.11 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் ஆக்கப்பட்டது.

இன்று மீண்டும் இதன் முக்கியமான பகுதிகளான நாடக சாலை, பள்ளியறை போன்ற பகுதிகளை புதுப்பிப்பதற்கும்,அவற்றின் பழமை கெடாமல் அவற்றை பார்ப்பவர்கள் அவற்றின் சிறப்பை உணரக் கூடிய வகையில் ஒலி அமைப்புகளோடு உருவாக்குவதற்கும்,அதுபோல இங்கு இடம் பெற்று இருக்கக்கூடிய மிக முக்கியமான கல்வெட்டுகள், வட்ட எழுத்து கல்வெட்டுகள், சோழர் காலகல்வெட்டுகள், அதன் பிறகு வரக்கூடிய கல்வெட்டுகள் என்று பல்வேறு கல்வெட்டுகள், குறிப்பாக பல்வேறு காலங்களில் உள்ள கற்சிற்பங்கள் இவை அனைத்தையும் இங்கு ஒரு கருவாக்கி அருங்காட்சியகம் என்ற சொல்லக் கூடிய வகையில் இங்கு உருவாக்கி இருந்தோம்.

அவற்றையும் முறைப்படுத்தி அமைத்து வந்து கண்டுகளிக்கக் கூடியவர்கள் இதன் சிறப்புகளை உணரக் கூடிய வகையில் அமைப்பதற்கு பணிகளை துவக்க இருக்கிறோம். மூன்று கட்டமாக இந்தபணிகள் நடைபெற இருக்கிறது. முதலாவது கட்டப் பணிகள் மிக விரைவில் துவங்க உள்ளது. பொழிவூட்டக் கூடிய பணிகளை தாண்டி வெளியே ஒருபூங்கா போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் கற்சிற்பங்களை நிறுவுவதற்கும், தொடர்ந்துஅங்கு நூலகம் ஒன்று பழமையோடு உருவாக்குவதற்கும் திட்டங்கள் இருக்கின்றது.

அந்ததிட்டங்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்துவது குறித்து தொல்பொருள் துறையிலே விளக்கியிருக்கிறார்கள். அதை நானும், மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தமரபுச் சின்னங்களை காக்கவும், பராமரிக்கவும் பெரும் ஆர்வம் கொண்டு அத்தகைய பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள உள்ளோம்.

அதற்காக இன்று மகாலை பார்வையிட்டு என்னென்ன பணிகளை செய்யலாம் என்றும், இந்த பணிகளின் வாயிலாக தமிழ்நாட்டிலே மிகப் பெரிய தொன்மையான நகரம் மதுரை மாநகரம் என அழைக்கப்படும்.

தமிழ் எழுஉடல் செங்கோல் வேந்தே என்று புறநானூற்றில் அழைக்கக் கூடிய அளவிற்கு ஒரு பாரம்பரிய இந்தநகரத்தினையும், வரலாற்று சுவடுகளாக இருக்கக்கூடிய இந்த அரண்மனை வளாகத்தையும் அதை ஒட்டிய பகுதிகளையும் புதுப்பொழி வோடுஅமைப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

தமிழ்மொழி என்பது யாராலும் புறக்கணிக்க முடியாத ஒருமொழி. பின்னே புதுமைக்கும்,முன்னே பழமைக்கும் எப்போது இருக்கக் கூடிய உயர் மொழி செம்மொழி தமிழ்மொழி. தமிழனுடைய செம்மை தமிழ் இன்றைக்கு எழுத்து வடிவிலே இருக்கக் கூடிய அதனுடைய தொன்மை என்பது 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்திருக்கிறது.

தமிழன் எழுதக் கூடிய அளவிற்கு நாகரிகம் படைத்தவனாக இருந்திருக்கிறான் என்பதை கீழடி ஆய்வு முடிவுகள் சொல்லியிருக்கிறது. அதனால் எந்த காலத்திலும் யாராலும் தமிழை புறந்தள்ளிவிட முடியாது. அதற்காகத்தான் தமிழுக்கு செம்மொழி என்ற மிகபெரிய அந்தஸ்தை தலைவர் கலைஞர் கொடுத்தார்கள்.

தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி இருக்கிறது. 1989ம் ஆண்டில் நீதியரசர் ரெத்தின வேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கூட தென் மாவட்டங்களில் இருக்கக் கூடிய தொழில் வளர்ச்சிதான் இங்கு இருக்கக்கூடிய சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கூடியஒன்றாக இருக்கும் என்பதை தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். அதைஒட்டித்தான் 2007ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் புதிய தொழில் கொள்கையை உருவாக்குகின்ற போது அதிலே தென் மாவட்ட வளர்ச்சிகான திட்டங்களை தந்தார்கள்.

குறிப்பாக தூத்துக்குடி, மதுரை இடையே இருக்கக் கூடிய இந்த இண்டஸ்டிரியல் காரிடார்(பெருவழி) என்பதற்கு வடிவம் கொடுக்கப்பட்டது. எங்கள் தொழில்துறையின் முக்கிய முயற்சியாக மதுரை-தூத்துக்குடி இடையே இண்டஸ்டிரியல் காரிடார்(பெருவழி)ஐ சிறப்பான முறையிலே உருவாக்குவதற்கும், இயங்காமல் இருக்கக்கூடிய ஸ்பெஷல் பர்பஸ் வைக்கிளை இயங்க செய்வதற்கும், புதிய தொழிற்சாலைகளை தென்மாவட்டங்களுக்கு கொண்டு வருவதற்காகவும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த முயற்சியில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றார்கள். இது தொடர்பாக தொழில் அமைப்பைசேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன்(சோழவந்தான்), மு.பூமிநாதன்(மதுரைதெற்கு)ஆகியோர் உடன் இருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: