
அமெரிக்கன் கல்லூரி, காந்தி அருங்காட்சியகம் மற்றும் அஹிம்சை பொருளாதார கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தேசிய அளவிலான தற்சார்பு மற்றும் அஹிம்சைப் பொருளாதாரம் பயிற்சி பட்டறை 2.9.2022 அன்று நடைபெறுகிறது.
விழாவை கல்லூரி முதல்வர் முனைவர். M.தவமணி கிறிஸ்டோபர் தொடங்கி வைக்கிறார். காந்தியத் தலைவரும், அமெரிக்கன் கல்லூரி முன்னாள் மாணவரும் தியாகி. லட்சுமி காந்தன் பாரதி மற்றும் காந்தியச் செயல்பாட்டாளர் அனந்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
காந்திய மற்றும் குமரப்பா பொருளாதார கருத்துக்களையும் அவற்றின் நடைமுறை செயல்பாடுகளையும் மற்றும் இன்றைய இளைய தலைமுறை மாணவர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றிய கருத்துக்கள் விவாதிக்கப்பட உள்ளது.
இவ்விழாவில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. முதுகலை துறைத் தலைவர் முனைவர்.சி.முத்துராஜா. பங்குபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு தொடர்புக்கு 9486373765.