
அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத் துறையில் பொருளாதாரத் துறை மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், கல்லூரி வளர்ச்சி கவுன்சில், டீன், முனைவர். K.சதாசிவம் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் அவர் பேசுகையில், இன்றைய நிலையில் மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன ஆனால் அவற்றை நீங்கள் பயன்படுத்தும் வகையில் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும். உலகளாவிய அளவில் உள்ள பொருளியல் கல்வியையும் இந்தியப் பொருளாதாரத்தையும் பயன்படும் வகையில் அறிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தெரியும், நல்ல முறையில் கற்று பட்டமும் பயிற்சியும் பெற்றால் அரசுத் துறை, தனியார் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயவேலை வாய்ப்புகள் போன்றவற்றில் பங்குபெற்று வெற்றி பெறலாம். பொருளியல் கல்வி அதிக அளவில் வேலைவாய்ப்பு பெறவும், வருமானம் ஈட்டுவதற்கும் உதவுகிறது.
நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் குடும்பப் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை உங்களின் கல்வி மூலம் பலன் தரவேண்டும். இந்திய மாணவர்கள் உலகம் முழுவதும் சென்று தங்களின் வேலைவாய்ப்பு திறன்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் முன்னேற்றத்துக்கு உதவுகின்றனர்.
நீங்களும் உங்கள் வேலைவாய்ப்பு திறன்களை வளர்த்துக் கொண்டு, நல்ல பொருளாதார நிலையில் இருக்க வேண்டும் என்றார்.
நடைபெற்ற இவ்விழாவில் முதுகலை துறைத் தலைவர் முனைவர். சி.முத்துராஜா நிகழ்ச்சி பற்றி விளக்கினார். பேரா.ஜேக்கப் பொன்ராஜ், மன்றத் தலைவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கூடுதலாக மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி பங்கு பெற்றனர்.