அமமுக மதுரை புறநகர் தெற்குமாவட்டச் செயலாளர் | ஒன்றிய கழக நிர்வாகிகள் சந்திப்பு
Amamuga Madurai Suburban South District Secretary | Union executives meeting

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் இருந்து வருகிறார் தொடர்ந்து.
சில தினங்களுக்கு முன்பு கழக அமைப்புச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் செயலாளராகவும் தலைமை கழகத்தால் வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட உசிலம்பட்டி திருமங்கலம் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த நிலையில் தற்போது சோழவந்தான் தொகுதியும் தெற்கு மாவட்ட கழகத்திற்கு கூடுதலாக இணைக்கப்பட்டு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் அலங்காநல்லூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் வாடிப்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் அலங்காநல்லூர் பேரூர் கழக நிர்வாகிகள் பாலமேடு பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதுடன் வாழ்த்துக்களையும் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராஜன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கோடீஸ்வரன் பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் மதன், அலங்காநல்லூர் பேரூர் செயலாளர் ராஜ பிரபு, பாலமேடு பேரூர் செயலாளர் முருகேசன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், தகவல் தொழில் நுட்ப அணி ரஜினி பிரபு.
மற்றும் சோழவந்தான் பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர் சுந்தர், சிறுபான்மை பிரிவு செயலாளர் ரவி, கச்சிராயிருப்பு ஊராட்சி செயலாளர் பசும்பொன், கச்சைகட்டி ஊராட்சி செயலாளர் வெள்ளிமலை, காடுபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சால்வை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.