#வேட்டைநாய் #வண்டன்பெரியசாமி #நாட்டுநாய்
முதல் வீடியோ லிங்க்
https://www.youtube.com/watch?v=cAlx3…
வேட்டை நாய் வளர்ப்பில் நான்கு தலைமுறை | வண்டன் பெரியசாமி ஐயா
நாம் ஏற்கனவே முந்தைய முதல் பகுதியில் உயர்திரு. வண்டன் பெரியசாமி ஐயா அவர்கள் வேட்டை நாய் வளர்ப்பு குறித்து பார்த்தோம். அந்த வீடியோ இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பார்க்காதவர்கள் அதை நிச்சயமாக பாருங்கள்.
அதன் தொடர்ச்சியாக இந்த வீடியோவில், அவரது இரண்டாவது மகனான உயர்திரு. ஹரி பாண்டியன் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 10 வயதில் இருந்தே வேட்டை நாய்களுடன் களத்திற்குச் சென்றுள்ள இவர், தனது அப்பா காலத்தில் வேட்டை நாய்கள் எப்படி இருந்தன என்பது குறித்து விரிவான பதிவினை கொடுத்துள்ளார்.
பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அதேபோல் வளர்ப்பு முறைகள் குறித்தும், இன்றைக்கு வியாபார ரீதியாக வேட்டை நாய்கள் எப்படியெல்லாம் தரம் குறைந்து வருகின்ற என்பது குறித்தும் அழுத்தம், திருத்தமாக கூறியுள்ளார்.
அன்றைய காலகட்டங்களில் வேட்டை நாய்கள் கொடுக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம், வேட்டையாடும் வழக்கம் இருந்த காரணத்தினாலும், ஓடக் கூடிய நல்ல நாய்கள் தங்களிடம் இருந்து வேறு நபர்களுக்கு சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் என்ற உண்மையை வெளிப்படையாக கூறியுள்ளார்.
பெரும்பாலும் அக்காலத்தில் நல்ல நாய்கள் தங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும், அந்த நாய்கள் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதே நல்ல நாய்கள் மற்றவர்களுக்கு கொடுக்கப்படாததற்கு காரணம் என்பதை நமது சேனலில் முதன் முதலாக பொதுவெளியில் ஒப்புக் கொண்டிருக்கும் திரு.ஹரி பாண்டியன் அவர்களுக்கு எங்களது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
காலம் எப்போதும் உண்மையை மட்டும் விட்டுச் செல்லும் என்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டம். இளம் தலைமுறைகளிடம் நேர்மையும், உண்மையும் நிறைந்து இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுபோன்றவர்களை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுவதில் எங்களுக்கும் கர்வமுண்டு.
இன்னும் ஐயா வண்டன் பெரியசாமி அவர்களின் அனுபவ வீடியோக்கள் தொடரும் என்ற தகவலுடன் உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம் !!
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
Hello Madurai Raj – 📞 6382333644 ( Camera Man )
_________________________________________________________