சினிமா

அப்பாவிடம் பட வாய்ப்பு கேட்ட அதிதி / விருமன் விமர்சனம்

Guest who asked father for film opportunity / Guest review

தமிழ் சினிமா நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். இன்னைக்கு நாம பார்க்கப்போவது சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தின் புதிய கதாநாயகி அதிதி பத்தித்தான்.

தமிழ் சினிமா ல பிரம்மாண்டம் அப்டீனாலே அது சங்கர்தான். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். அதுல இரண்டாவது மகள்தான் அதிதி.

சமீபத்தில தான் அதிதி டாக்டர் படிப்பை முடித்து பட்டம் பெற்ற கையோட விருமன் படத்துல கலக்கியிருக்காரு.

இது அவருக்கு முதல் படம் என்றாலும், ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்காங்க. அதுக்கு ஒரே காரணம் தான் ஒரு மிகப் பெரிய பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் மகள் அப்டீங்குற எந்தவித பந்தாவும் இல்லாம எல்லார்கிட்டையும் மிக எளிமையா பழகுற விதம்தான்.

முக்கியமா விருமன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே அதிதி சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடிச்சது அவருக்கு அடிச்ச ஜாக்பட்டுனுதான் நா சொல்லுவேன்.

ஷங்கரின் மகளாகவே இருந்தாலும், அதிதி நடிப்பு பத்தி நிறைய கத்துக்கிட்டுக்கிட்டுதான், சினிமால காலடிய எடுத்து வைச்சுருக்காங்க. குறிப்பா துறுதுறு கேரெக்டர், சரளமான தமிழ் பேச்சு, இனிப்பான குரல், பந்தா இல்லாத குழந்தை தனமான குணம் இதுஎல்லாம்தான் பலரும் அதிதி பக்கம் திரும்ப காரணம்.

இன்றைய இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ் என எங்க பார்த்தாலும் அதிதி வீடியோ தான். அதிலும் கஞ்சாப் பூ கண்ணால, மதுரை வீரன் அழகுல பாட்டுக்கு அதிதி ஆடியது போல பலரும் ரீல்ஸ் செய்றது நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு.

நடிப்பு, டான்ஸ் ல மட்டுமில்ல, பாட்டு பாடுறதுலையும் அதிதி செமதான். விருமன்படத்துல யுவன் சங்கர் இசையில மதுரை வீரன் அழகுல அப்டீங்குற பாட்டப்பாடி சொக்க வச்சிருக்காங்க.

எப்டி இப்டி அதிதி நடிகையா ஒரே படத்துல ஓஹோனு பெயர் வாங்குனாங்க அப்டீனா ? சின்ன வயசுல இருந்தே சினிமா ஆசை அதிதிக்கு இருந்திருக்கு.

முதல்ல படிப்பு அதுக்கு அப்புறமா சினிமா படபிடிப்பு அப்டீனு கொள்கையோட இருந்த அதிதி, தன்னோட 5 வயசுல இருந்து பாட்டு கத்துக்கிட்டு செமையா பாட, அப்பா சங்கர் பின்னனி பாடகிக்கு ஓகே சொல்ல, அதிதி அதுக்கும் மேல நடிகை னு கேட்க , வேற என்ன ? அவர் ஹீரோயின ஆக விரும்புன முதல் படமே விருமன்தான்.

விருமன் படத்த பத்தி சொல்லணும்னா, படம் முழுக்க அதிதிதான் நிறைஞ்சுருக்காங்க. அதுல டான்ஸ் ல செம்ம மாஸ் காட்டியிருக்காங்க. முதல் படத்துல நடிச்ச மாதிரி எந்த இடத்துலையும் தெரியல, நடிப்புல பின்னி எடுத்துருக்காங்க, முக்கியமா கவர்ச்சி இல்லாம இளசுகள் மனசுல நிக்குறது ரொம்பவே சிரமமான விசயம். ஆனா அதிதி கவர்ச்சி துளியும் இல்லாம கவர்ந்து இருப்பது தனி அழகுதான்.

விருமன் படம் ஏற்கனவே வந்த கததான். பார்த்த அதே பழை சீனுதான், அப்பி, இப்டி னு விமர்சனம் இருந்தாலும், அதிதி அத எல்லாம் உடச்சு விருமன எல்லாரையும் விரும்பவே வச்சுருக்காங்க என்பது என்னோட கருத்து. மீன் குஞ்சுக்கு கத்து கொடுக்கணுமா ? என்ன ?

விருமன் படத்துக்கு பிறகு, பல பட வாய்ப்புகள் அதிதிக்கு வந்திருப்பதாக சொல்லப்படுது. சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படித்துல அதிதி தான் கதாநாயகியாம்.

இதற்கான பட பூஜையும் ஆரம்பமாயிருச்சு. தேசிய விருது வாங்கின ‘மண்டேலா’ பட இயக்குநர் அஸ்வின் மடோனா தான் இந்த படத்த இயக்குகிறார்.

அதேபோல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்கிற படத்தில் சிம்புவோட நடிச்சுக்கிட்டு வர்றாங்க அதிதி. இத தொடர்ந்து, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் பத்து தல படத்திலையும நடிக்க உள்ளதாக தகவல் கிடச்சுருக்கு.

இந்த இரு படங்களுக்கு அடுத்ததா சிம்பு, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் ‘கொரோனா குமார்’ படத்திலயும் அதிதி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுது.

அதிதிக்கு இப்படி ஒரு அதிஜ்டம் அடிக்கும் னு அவரு அப்பா சங்கர் நிச்சயமா நினைச்சு பார்த்து இருக்க மாட்டார்.

அப்பாவையே திக்கு முக்கு ஆட வச்ச அதிதி கிட்ட இயக்குநர் சங்கர் படத்துல எப்ப நடிக்க போறீரிங்க அப்டீனு கேட்டதுக்கு ? யோசிக்காமா, இயக்குநர் ‘ஷங்கர் சார்… எனக்கு பட வாய்ப்பு கொடுங்கன்னு’ இந்தப் பேட்டி மூலமா கேட்டுக்கிறேன் இப்டினு டக்னு சொல்லியிருக்காங்க.

நிச்சயமா அப்பா சங்கரோட படத்துல பிரம்மாண்டமா அதிதி அதிர வைப்பாங்க அப்டீங்குற சந்தோசமான தகவலோட உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சினிமா ரசிகன் நன்றி வணக்கம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: