பெட்ஸ்வீடியோஜல்லிக்கட்டு

அன்றைக்கு துண்டுக்குத்தான் தொழுவத்தில் ஜல்லிக்கட்டு | பொருசுபட்டி மலைச்சாமி ஐயா

Porusupatti Malaisami Ayya | jallikattu | Madurai

#jallikattu #manjuvirattu #vadam

பயண அனுபவம்

பூலாம்பட்டி காரி காளை வீடியோவை பார்த்துவிட்டு, பொருசுபட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பி நித்தீஸ் தொடர்பில் வந்து, அண்ணே எங்க ஊரு மாடை எடுக்க வருவீங்களா என்று கேட்க, நிச்சயமாக என்று இடுத்த இரண்டு நாளில் (11.02.2022) கிளம்பிச் சென்றன். யானைமலையை தாண்டி சிட்டம்பட்டி என்ற கிராமத்திலிருந்து, மாங்குளம் வழியாக 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பொருசுபட்டி கிராமம். மதுரையை சுற்றி இப்படி எல்லாம் கிராமம் உள்ளதா என்றபடி எனது பயணம் சென்றது. அன்றைய பொழுது குளிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் சாரலும் என் மீது பட்டது. செம கிளைமேட்.

கிராமத்திற்குள் நுழைந்ததும், என்னை அழைத்துச் செல்ல இரு தம்பிகள் வந்திருந்தனர். அவர்களுடன் சென்றேன். சற்று நேரத்தில் மலைச்சாமி ஐயா வீட்டிற்குச் சென்றுவிட்டோம். இங்கு கம்பீரமாக இரண்டு நாட்டு காளைகள் நின்று கொண்டிருந்தன. சஹின் தம்பி அன்புடன் வரவேற்று, அண்ணே இதுதான் எங்க தாத்தா மூனு தலைமுறையா மாடு வளர்க்கின்றோம். என்னோட 4வது தலைமுறை என்று நிறைய விளக்கங்கள் கொடுத்தார்.

பன்னிரெண்டாம் படிக்கும் தம்பி சஹினுக்கு அன்றைக்கு தேர்வு. 12 மணிக்குள் செல்ல வேண்டும். நாம் 10:30 மணிக்கு அங்கிருந்தோம். எனக்கு தேவையான சில காட்சிகளை எடுத்துவிட்டு, தம்பி பரீச்சைக்கு கிளம்புக்கு என்றேன். ஆனால் தம்பி இல்லனே நீங்க முடிங்க, கடைசிவரை நான் இருக்கின்றேன் என்றார். அவரது ஆர்வத்தை பாராட்டினாலும், பரீச்சை முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, எவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக எனது பணியை முடித்தேன்.

கிளைமேட் சூப்பராக இருந்த காரணத்தால் வீடியோ காட்சி அனைத்தும் அருமையாக இருந்தது. மாடடை ஜோடித்த பிறகு அப்படி ஒரு அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம். இறுதியாக இன்னும் சில நண்பர்கள் அங்கு வந்தனர். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, சஹின் பரீச்சைக்கு யூனிஃபாம் போட்டுக் கொண்டு கிளம்பியபோதுதான் எனக்கு திருப்தியாக இருந்தது. நேரம் ஆகிய காரணத்தால் தம்பி போட்டோ மட்டும் மறக்காம அனுப்பீருங்க அண்ணே என்று அங்கிருந்து பறந்துவிட்டார்.

அதன் பின்பாக அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் நித்தீஸ் நம்மை அவரது கிராமத்திற்கு அழைத்ததுச் சென்றார். அங்கு ஒரு கண்ணை இழந்த கோவில் மறைமாடு இருந்தது. 25 வாடிகளில் அவிழ்த்துவிட்ட மாடு, கண்ணை இழந்த பிறகு ஒரு வாடியில் மட்டும் பிடிபட்டுள்ளது. சரி அதை எடுக்க அங்கிருந்து கிளம்பினேன். அங்கு ஒரு சம்பவம் நடந்தது. அதை அந்த வீடியோவில் அந்த அனுபவத்தை பகிர்கின்றேன். அதுவரை காத்திருங்கள்.

நன்றிகள்
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
Hello Madurai Raj – 📞 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/details?id=com.lone.anew&hl=en_IN&gl=US

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: