
மதுரை மாவட்டம் புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக ஓபிஎஸ் அணி சார்பில் நியமிக்கப்பட்ட ராமமூர்த்தி என்பவருக்கு, வரவேற்பு அளிக்கும் விதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்ததால் திருமங்கலம் நகர் ஸ்தம்பிக்கும் அளவிற்கு கூட்டம் அலை பாய்ந்தது.
ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் கண்டுகுளம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து , அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட ஓபிஎஸ் அணியினர், திருமங்கலம் நகரில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, ஓபிஎஸ் வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1