செய்திகள்

அதிகாரிகள் அலட்சியம் | மின்சார கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி | சோழவந்தான் பகுதி சோகம்

Officials a negligence | One person dies after falling off electric wire | Cholavanthan area tragedy

மதுரை மாவட்டம், சோழவந்தானில் முக்கிய பகுதியான வட்ட பிள்ளையார் கோவில் அருகில் தொடர்ந்து, இது போன்ற நிகழ்வு நடப்பதாகவும் அரசு அதிகாரிகள்விபத்து நடக்கும் முன்துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று, பால்குடம் அக்னிச்சட்டி விழா நடைபெற்றது. சோழவந்தான் மந்தை களத்திவ் பூக்குழி திருவிழா நடைபெற்று வரும் வேளையில், பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பூக்குழி நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இதற்கு அருகிலேயே மின்சார கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலியான நிலையில், சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை மின்சாரத்தை தடை செய்யவும் இல்லை. இதனால், பெரும் அச்சத்தில் பொதுமக்கள் பக்தர்கள் உள்ளனர்.

இறந்துகிடந்த முதியவர் சந்திரனின் பிணத்தை அப்புறப்படுத்த சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எந்த ஒரு ஆம்புலன்ஸ் வர வில்லை.

இந்தப் பகுதியில் அடிக்கடி மின் கம்பம் அருந்து விழும் சூழ்நிலையில், இது குறித்து மின்சாரத் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்த போது, எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால், தற்போது ஒரு மனித உயிர் பலியாகி உள்ளது. மின்சாரத் துறையின் குளறுபடியால், தற்போது மனித உயிர் பலியானது வெட்கக்கேடானது.

இந்த விவகாரத்தில், மின்சாரத்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்து பாதிக்கப்
பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க ஆவண செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: