
மதுரை மாவட்டம் அச்சம்பத்து பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோலின் அளவு கடந்த சில நாட்களாக குறைந்து வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் நேற்று நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோலை திருடும் காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1
1