செய்திகள்போக்குவரத்து

அக்டோபர் 1 முதல் மதுரை கோட்டத்தில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரங்கள் மாற்றம்

Change in timings of trains departing from Madurai route from October 1

மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் சில ரயில்களின் புறப்படும் நேரங்கள் அக்டோபர் 1 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06668) திருநெல்வேலியில் இருந்து காலை 07.35 மணிக்கு பதிலாக காலை 07.30 மணிக்கும், தூத்துக்குடி – மணியாச்சி சிறப்பு ரயில் (06671) தூத்துக்குடியில் இருந்து காலை 08.30 மணிக்கு பதிலாக காலை 08.25 மணிக்கும், மற்றொரு தூத்துக்குடி – மணியாச்சி சிறப்பு ரயில் (06847) தூத்துக்குடியில் இருந்து இரவு 10.45 மணிக்கு பதிலாக இரவு 10.10 மணிக்கும்/

மற்றும் ராமேஸ்வரம் – புவனேஸ்வர் விரைவு ரயில் (20895) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 08.50 மணிக்கு பதிலாக காலை 08.40 மணிக்கும், ராமேஸ்வரம் – திருப்பதி விரைவு ரயில் (16780) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 04.30 மணிக்கு பதிலாக மாலை 04.20மணிக்கும், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16852) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 05.25 மணிக்கு பதிலாக மாலை 05.20 மணிக்கும்.

ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயில் (06656) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு பதிலாக மாலை 06.00 மணிக்கும், திருச்சி வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – கோயம்புத்தூர் விரைவு ரயில் (16617) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 07.25 மணிக்கு பதிலாக இரவு 07.10 மணிக்கும், ராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் (22662) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 08.25 மணிக்கு பதிலாக இரவு 08.20 மணிக்கும் புறப்படும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: